பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40


பரதன்‌ வந்தான்‌. தன்‌ தாய்‌ கைகேயி இருந்த அரண்மனைக்குச்‌ சென்றான்‌.

“தந்தை எங்கே? அண்ணன்‌ எங்கே?” என்று கேட்டான்‌.

“உன்‌ தந்தை இறந்தார்‌. இராமன்‌ வனம்‌ சென்றான்‌,” என்றாள்‌ கைகேயி.


‘வனத்தினன்‌’ என்று அவள்‌
        இசைத்த மாற்றத்தை
நினைத்தனன்‌ இருந்தனன்‌
        நெருப்பு உண்டான்‌ என
‘வினைத்திறம்‌ யாது இனி
        விளைப்பது? இன்னமும்‌
எனைத்துள கேட்பன
        துன்பம்‌ யான்‌’? என்றான்‌.

இராமன்‌ காடு சென்றான்‌ என்பது கேட்டான்‌ பரதன்‌. தீ உண்டவன்‌ போல்‌ துடித்தான்‌. “இன்னும்‌ எத்தனை கெடுதல்கள்‌ உள்ளன? கேட்க வேண்டிய துயரச்‌ செய்திகள்‌ இன்னும்‌ எத்தனை?” என்று அலமந்தான்‌.

வனத்தினன்‌– இராமன்‌ காடு சென்றான்‌; என்று– என்று; அவள்‌ இசைத்த– அந்தக்‌ கைகேயி சொன்ன; மாற்றத்தை– சொல்லை நினைத்தனன்‌– எண்ணி– எண்ணிப்‌ பார்த்து; நெருப்பு உண்டான்‌ என– நெருப்பை உட்கொண்டவன்‌ போல; இருந்தனன்‌– மிக்க பெரும்‌ துன்பத்துடன்‌ இருந்த; வினைத்திறம்‌ யாது?– இனியும்‌ விளையப்‌ போகும்‌ தீவினை யாது உண்டோ?– இன்னமும்‌