பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

41

எனைத்துள கேட்பன துன்பம்‌ யான்‌– நான்‌ இன்னும்‌ கேட்க வேண்டிய துயரச்‌ செய்திகள்‌ எத்தனை பாக்கி உள்ளன என்றான்‌.

துடித்தன கபோலங்கள்‌;
        சுற்றும்‌ தீச்சுடர்‌
பொடித்தன மயிர்த்தொளை
        புகையும்‌ போர்த்தது
மடித்தது வாய்‌; நெடு மழைக்‌
        கை மண்பக
அடித்தன; ஒன்றொடு ஓன்று
        அசனி அஞ்சவே

கன்னங்கள்‌ துடித்தன. மயிர்த்‌ துவாரங்கள்‌ தீயுமிழ்ந்தன; வாய்‌ மடித்தது. கைகள்‌ ஒன்றை ஒன்று அடித்துக்‌ கொண்டன.

கபோலங்கள்‌– கன்னங்கள்‌; துடித்தன– துடித்தன; மயிர்த்‌ தொளை– மயிர்த்‌ துவாரங்கள்‌; சுற்றும்‌– நாற்புறமும்‌; தீச்சுடர்‌– அனல்‌ கொழுந்தை; பொடித்தன– அரும்பின; புகையும்‌ போர்த்தது– புகையும்‌ நாலாபக்கமும்‌ பரவியது; வாய்‌ மடித்தது– வாய்‌ மடித்துக்‌ கொண்டது; மழை நெடுகை– மேகம்‌ போன்ற வன்மைக்‌ குணம்‌ கொண்ட நீண்ட கைகள்‌; அசனி அஞ்ச– இடியும்‌ அஞ்சும்படி; மண்பக– பூமி பிளக்கும்படி (பேரொலி செய்து) ஒன்றோடு ஒன்று; அடித்தன– ஒன்றை ஒன்று அடித்துச்‌ கொண்டன.

சூடின மலர்க்கரம்‌
        சொல்லின்‌ முன்‌ செவி