பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

45

அன்றால்‌– தெய்வக் குற்றமும்‌ அன்று ஆயின்‌; பெற்றவன்‌ இருக்கவே– பெற்ற தகப்பன்‌ உயிரோடு இருக்க; பிள்ளை கான்‌ புக உற்றது என்‌?– பிள்ளை காடு சென்றது எதனால்‌? பின்‌ அவன்‌ ௨லந்தது என்‌– பின்னே அவன்‌ (தசரதன்‌) உயிர்‌ நீங்கியது எதனால்‌?” என்றான்‌.


“தீயன இராமனே செய்யுமேல்‌ அவை
      தாய்‌ சொல்‌ அல்லவோ
தலத்துள்ளோர்க்கு எலாம்‌
      போயது தாதை விண்‌
புக்க பின்னரோ?
      ஆயதன்‌ முன்னரோ
அருளுவீர்‌” என்றான்‌.

அப்படியே இராமன்‌ தீயன செய்திருப்பினும்‌ அதனால்‌ என்ன? தாய்‌ தன்‌ மக்களைக்‌ கோபிப்பதில்லையா? வருத்தி அடக்குவதில்லையா?

சரி; அவன்‌ வனம்‌ சென்றது மன்னர்‌ இறப்பதன்‌ முன்னரோ? பின்னரோ?

தீயன– தீய செயல்களை; இராமனே செய்யுமேல்‌– இராமனே செல்வானேயானால்‌; அவை– அச்செயல்கள்‌– தலத்து உளோர்க்கு எலாம்‌– இவ்வுலகத்தலர்க்கு எல்லாம்‌; தாய்‌ சொல்‌ அல்லவோ– தாயின்‌ சொல்‌ அல்லவோ?; போயது– இராமன்‌ வனம்‌ போனது; தாதை– தந்‌தையாகிய தசரத சக்ரவர்த்தி; விண்‌ புக்க பின்னரோ ஆயதன்‌ முன்னரோ அருளுவிர்‌– இறந்ததன்‌ முன்போ அல்லது அதற்குப்‌ பிறகோ சொல்வீர்‌ என்‌றான்‌.