பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

47


மந்திரி சுமந்திரனும்‌ தசரத மன்னனுக்கு வேண்டிய ஈமக்‌ கடன்‌ ஏற்பாடுகளைச்‌ செய்வித்தான்‌.

பிறகு பரதன்‌ சபை கூட்டி “நான்‌ அரசனாக முடிதரிக்க மாட்டேன்‌ காடு சென்று ராமனை அழைத்து வருவேன்‌,” என்று கூறினான்‌.

படைகள்‌ புறப்பட்டன. அயோத்தி மக்களும்‌ புறப்‌பட்டார்கள்‌. எல்லாரையும்‌ அழைத்துக்‌ கொண்டு கானகம்‌ புறப்பட்டான்‌ பரதன்‌.

எல்லாரும்‌ கங்கைக்‌ கரை அடைந்தார்கள்‌, படைகளின்‌ வருகையையும்‌ பரதன்‌ வருகையையும்‌ கேள்வியுற்றான குகன்‌.

அஞ்சன வண்ணன்‌ என்‌ ஆருயிர்‌
        நாயகன்‌ ஆளாமே
வஞ்சனையால்‌ அரசு எய்திய
        மன்னரும்‌ வந்தாரே!
செஞ்சரம்‌ என்பன தீ
        உமிழ்கின்றன செல்லாவோ
உஞ்சு இவர்‌ போய்‌ விடின்‌ ‘நாய்‌
        குகன்‌” என்று எனை ஓதாரோ

எனது ஆருயிர்த்‌ தலைவன்‌ மைவண்ணன்‌ இராமன்‌ நாடாளாது தடுத்து வஞ்சனை புரிந்து அரசு பெற்ற இந்த மன்னரும்‌ வந்தாரே!

தீ உமிழ்கின்ற அம்புகளை நான்‌ இவர்‌ பால்‌ செலுத்தினால்‌ அவை இவர்‌ மீது பாயாது போய்‌ விடுமோ?

என்னைக்‌ கடந்து இவர்‌ உயிருடன்‌ போய்‌ விட்டால்‌ நன்றி கெட்ட நாய்‌ குகன்‌ என்று என்னைக்‌ கூற