பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

நெரிந்து விழ– என் மார்பு நெரிபட்டு நான் கீழே விழ; என்னை உதைத்து– என்னைக் காலால் உதைத்து; உருட்டி– நான் உருண்டு விழச் செய்து; மூக்கு அரிந்த– என் மூக்கை அறுத்த; நரன்– மானிடன்; இருந்து– இன்னமும் உயிருடன் இருந்து; தோள் பார்க்க– தன் தோள் வலி கண்டு பெருமிதம் அடைய; நான் இருந்து– நான் தனியே இருந்து கொண்டு; புலம்புவதோ? கரன் இருந்த வனம் அன்றோ?; இவை படவும்– இவையாவும் இருக்கவும்; கடவேனோ– நமது ஆட்சியில் நான் இக்கதி அடைவேனோ?

தலை சிந்தின; வழி சிந்தின;
        தழல் சிந்தின; தரைமேல்
மலை சிந்தினபடி சிந்தின
        வருசிந்துர மழைபோல்
சிலை சிந்தின; கணை சிந்தின
        திசை சிந்தின; திசையூடு
உலை சிந்தின; பொறி சிந்தின
        உயிர் சிந்தின உடலம்.

தலைகள் சிந்தின; விழிகள் சிந்தின; நெருப்புப் பொறி பறக்கும் விழிகள் சிதறின; தரையிலே யானைகள் மலை போல் விழுந்தன; இராமன் விட்ட அம்புகள் எல்லாத் திக்குகளிலும் மழை போல் உதிர்ந்தன; கொல்லன் உலைக்களத்திலிருந்து கிளம்பும் நெருப்புப் பொறிபோல் அரக்கர் தம் உடல்கள் சிதறின. உயிர்கள் சிதறின.

தலைசிந்தின– அரக்கர்களது தலைகள் சிதறின; தழல் சிந்தின விழி சிந்தின– தீப்பொறி கக்கிய அவர் தம் விழிகள் சிந்தின; தரைமேல்– பூமியிலே; மலை சிந்தினபடி– மலை-