பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13

கள் சிதறி விழுந்தன போல். வருசிந்துரம்–எதிர்த்து வந்த யானைகள்; சிந்தின–சிதறி விழுந்தன; மழைபோல் சிலை சிந்தின கணை–மழைபோல் இராமன் வீசிய அம்புகள்; திசை சிந்தின–எல்லாத் திக்குகளிலும் சிதறின; திசை ஊடு–அத்திக்குகளில் எல்லாம்; உலை சிந்தின பொறி சிந்தின உடலம் –கொல்லன் உலைக் களத்திலிருந்து சிதறிய நெருப்புப் பொறிபோல் உடல்கள் சிதறின; உயிர் சிந்தின.

அரக்கர் படைகள் எல்லாம் அழிந்து போயின. கரன் மாண்டான்; தூஷணனும் மாண்டான்.

மூக்கு அறுபட்ட சூர்ப்பணகை இலங்கை சென்றாள். அவளது அலங்கோலங் கண்ட இலங்கை மக்கள் தமக்குள் பின் வருமாறு பேசிக்கொண்டனர்.

போர் இலான் புரந்தரன்
        ஏவல் பூண்டான்
ஆர் உலாம் நேமியான்
        ஆற்றல் தோற்றுப் போய்
நீரினான்; நெருப்பினான்;
        பொருப்பினான் இனி
ஆர் கொலாம் ஈது?” என
        அறைகின்றார் சிலர்

இவள் மூக்கை அறுத்தவர் எவராக இருப்பார்? தேவர்களின் தலைவன் இந்திரனாக இருப்பானோ? அன்று; அவன் தான் நம் இராவணனுடன் போர் செய்ய முடியாமல் தோற்று அவனுக்கு ஏவல் செய்கிறானே. திருமாலோ? அன்று. அவன் தான் இராவணனை எதிர்க்க முடியாமல்