பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

17



மேல்– மேலே உள்ள உலகங்களிலும்; கீழ்– கீழே உள்ள உலகங்களிலும்; உவமை இல்லார்– உவமை கூறுதற்கு வேறு எவரும் இல்லாதவர்; மானிடர்– மானிடர்; ஊன் உடை– மாமிச தேகம் கொண்டார்; கானிடை அடைந்து– காட்டிலே வந்து தங்கி; புவி காவல் புரிகின்றார் ராஜ்யபாரம் செய்கின்றனர்; மீன் உடை– மீன் பொறிக்கப் பெற்ற; நெடுங்கொடியினோன்– நீண்ட கொடியுடைய மன்மதன்; அனையர்– போன்றோர்; வாள் உருவி– தம் வாளை உருவி; தடிந்தனர்கள்– என் மூக்கை அறுத்துவிட்டார்கள்.

“மன் மதனை ஒப்பர்
        மணி மேனி; வட மேருத்
தன் மதன் அழிப்பர் திரள்
        தோளின் வலி தன்னால்;
என் அதனை இப்பொழுது
        இசைப்பது? உலகு ஏழின்
நல் மதன் அழிப்பர் ஓர்
        இமைப்பின் நனிவில்லால்”

மன்மதன் போலும் அழகினர்; அழகு மட்டும் உடையவர் அல்லர்; வடக்கே உள்ள மேரு மலையின் செருக்கை அடக்கும் புயவலியுடையவர்; கண்மூடிக் கண் திறக்கும் நேரத்தில் ஏழுலகங்களையும் அழிக்கும் வில் திறம் படைத்தோர்; அதை இப்பொழுது சொல்வதில் பயன் என்ன?

மணிமேனி– உடல் அழகில்; மன்மதனை ஒப்பர்– மன்மதனுக்கு ஒப்பாவார்; திரள்தோளின் வலி தன்னால்– தமது திரண்ட தோள்களின் வலிமையால்; வடமேரு தன்– வடக்கே உள்ள மேருமலையின்; மதன்– செருக்கை;

2