பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

21

நோக்கி) ஐய– ஐயனே! சுற்றமும் அக் கரன் முதலாகிய நம் சுற்றமும்; நொய்து தொலைந்தது– எளிதில் அழிந்து போயிற்று; என– என்று கூறி; சுமந்த கையாள்– தலைமேல் கையை வைத்துக்கொண்டு; உற்றது தெரியும் வண்ணம்– அங்கே நடந்தது தெரியும்படி; ஒரு வகை– ஒருவாறு; உரைக்கலுற்றாள்– சொல்லத் தொடங்கினாள்.

“சொல் என்தன் வாயில் கேட்டார்
        தொடர்ந்து எழு சேனையோடும்
கல் என்ற ஒலியில் சென்றார்
        கரன் முதல் காளை வீரர்
எல் ஒன்று கமலச் செங்கண்
        இராமன் என்று இசைத்த ஏந்தல்
வில் ஒன்றில் கடிகை மூன்றில்
        ஏறினர் விண்ணின்” என்றாள்.

“மூக்கறுபட்ட செய்தியை நான் வந்து கரன் முதலியோரிடம் சொன்னேன். சொல் கேட்ட அளவில் சேனைகள் பின் தொடரப் புறப்பட்டனர். செந்தாமரை போலும் அழகிய கண்களை உடைய அந்த இராமன் எனும் பெருமை மிக்கோன் ஒரே வில்லினால் மூன்றே நாழிசையில் அவர்கள் எல்லாரையும் விண் உலகுக்கு அனுப்பிவிட்டான்” என்றாள்.

சொல்– நான் கூறிய அச் சொற்களை; என்தன் வாயில் கேட்டார்– என் வாயினாலே நான் சொல்லக்கேட்டனராய்; தொடர்ந்து எழு சேனையோடும்– தம்மைப் பின் தொடர்ந்தெழுந்த சேனைகளோடும்; கல் என்ற ஒலியில்– கல் என்ற ஒலியோடு; சென்ற கரன் முதல் காளை வீரர்– கரன்