பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

அவர்கள் செய்யும் பெரிய அரியதான ஒத்துக்களும்; வயின்தொறும் - இடந்தொறும்; அறையும் - ஒலிக்கும்.

***


பாடுவார் பலர் என்னின்
       மற்று அவரினும் பலரால்
ஆடுவார் எனின் அவரினும்
       பலருளர் அமைதி
கூடுவார் இடை இன்னியாங்
       கொட்டுவார் வீடில்
வீடு காண்குறுந் தேவரால்
       விழு நடங் காண்பார்.

அந்த நகரத்திலே நாட்டிய விருந்து நடைபெறும்; தேவமாதர் பலர் பின்பாட்டுப் பாடுவார். மேலும் பலரான தேவமாதர் ஆடுவர். சுருதி கூட்டுவாரும், மத்தளம் வாசிப்பாரும் இன்னும் பலராயிருப்பர். எல்லாரும் தேவமாதரே. அரக்கர் அந்த நாட்டியக் கச்சேரி கண்டு களிப்பர்.

***

(நடனத்தில்) பாடுவார் பலர் என்னின் - வாய்ப்பாட்டு பாடுவார் பலர் என்றால்; மற்று அவரினும் பலர் ஆடுவார் - அவரைவிட மற்றும் பலர் ஆடுவார்; எனின் - இவர்கள் இப்படி என்றால்; அமைதி கூடுவார் - சுருதி கூட்டுவாரும்; இடை இன்னியம் கொட்டுவார் - நடுவே மத்தளம் முதலிய இனிய கருவிகளை வாசிப்பாரும்; அவரினும் பலர் உளர் - ஆடுவரைவிடப் பலராயுள்ளனர். (இவ்வாறு அந்நகரில் வாழ்வோர்) வீடில் வீடு - தடையற்ற விடுதலை; காண்குறும் தேவரால் - காண விரும்பும் தேவரால் (செய்யப்படும்); விழு நடம் காண்பார் - விழுமிய நடனங்களைக் காண்பார்கள்.

***