பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100

வெல்வது உறுதி. நீ கருதியன யாவும் கைகூடும். உன் விருப்பம்போல் இந்நகருள் செல்வாய்” என்றாள்.

அநுமனும் சென்றான்.

***

கோ மடங்கள் எங்கும் சுற்றிப் பார்த்தான் அநுமன்; ஆனை கட்டும் மடங்கள் எங்கும் தேடினான்; குதிரை லாயங்களில் எல்லாம் தேடினான். பூஞ்சோலைகள் எங்கும் தேடினான். வண்டானது ஒவ்வொரு மலராகத் தாவிச் செல்வது போல் எங்கும் சென்றான்.

***

கருங்கடல் கடந்த காலால் - கரிய கடலைத் தாவிச் சென்ற (தன்) கால்களால் (அநுமன்) ஆ துறு சாலை தோறும் - பசுக்கள் நிரம்பிய கொட்டில்கள் தோறும்; ஆணையின் கூடம் தோறும் - யானை கட்டப்பட்ட கொட்டராம் தோறும்; மாதுறு மாடம் தோறும் - பலவகை விலங்குகள் கட்டப்பட்டுள்ள இடங்கள் தோறும்; வாசியின் பந்தி தோறும்- குதிரை லாயங்கள் தோறும்; காதுறும் சோலைகள் தோறும்-காவல் உள்ள பூஞ்சோலைகள் தோறும்; பூதொறும் வாவி செல்லும் - ஒவ்வொரு பூவிலும் தங்கிப்பின் ஒவ்வொனறாகத் தாவிச் செல்கிற; பொறிவரி வண்டின் - புள்ளிகளும் கோடுகளும் கொண்ட வண்டு போல்; போனான் -அவ்வீதிகளில் சென்றான் அநுமன்.

***

பெரிய நாள் ஒளிகொள்
        நானாவித மணிப்பித்திப் பத்தி
சொரியுமா நிழல் அங்கங்கே
        சுற்றலால் காலின் தோன்றல்
கரியனாய் வெளியனாகிச்
        செய்யனாய்க் காட்டும்; காண்டற்கு
அரியனாய் எளியனாம் தன்
        அகத்துறை அழகனே போல்