பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108

நாளத்தில் - ஊன்றி உணரத்தக்க மலர்த்தண்டுகளின் உள் துளைகளிலும்; கால் என காற்றுப் போலவும்; புகை என - புகை போலவும்; கலக்கும் - உட்புகுந்து தேடுவான்; நுணுகும் வீங்கும் - அந்த அந்த இடத்திற்கு ஏற்றபடி மிகச் சிறிய உருவும் பெரிய உருவும் கொள்வான்; அவன் நிலை - வேண்டிய வடிவு கொள்ளும் அந்த அநுமனின் சிறப்பை; யாவரே நுவல்வார்? எவர் தான் சொல்ல வல்லார்; அணுவின் - அணுவிலும்; மேருவின் - மிகப் பெரிய மேருவிலும் விளங்கும்; ஆழியான் என - ஆழி ஏந்திய திருமால் போல (உட்புகுந்து) செலும் - செல்வான்.

நுணுகும், வீங்கும் என்பன அஷ்டமா சித்திகளின் பாற்பட்டனவாகும். இவ்வகை சித்திகள் யோகிகளே கைவரப் பெறுவர். அநுமன் மாபெரும் யோகி, ஆதலின் இந்த சித்தி பெற்றான் என்பர். மிகவும் நுண்ணிய வடிவம் கொள்ளுதல் அணிமா என்ற சித்தியாகும். மிகப் பெரிய வடிவம் கொள்ளுதல் மணிமா என்ற சித்தியாகும்.

***

பளிக்கு வேதிகைப்
        பவழத்தின் கூடத்துப் பசுந்தேன்
துளிக்குங் கற்பகப் பந்தரில்
        கரு நிறத்தோர் பால்
வெளுத்து வைகுதல் அரிது என
        அவர் உருமேவி
ஒளித்து வாழ்கின்ற தருமம்
        அன்னான் தனை யுற்றான்.

பளிங்கினாலாகிய மேடையிலே, பவழ மயமான மண்டபத்துள்ளே, பசுந்தேன் துளிக்கும் மலர்களை உடைய விதானத்தின் கீழே, விபீஷணனைக் கண்டான். வெண்மை நிறம் பொருந்திய தரும தேவதையானது அந்த அரக்கர்