பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

111


முந்து - முதன்மையான! முழுமதி முகத்து - பூரண சந்திரனையொத்த முகங்களிலே; சிந்துரம் பயில் வாய்ச்சியர் - சிவப்பு நிறம் தீட்டப்பட்ட வாய்களையுடைய; அரம்பையர் பலரையும் தெரிந்து - அரம்பை முதலிய மகளிர் முதலியவரையும் பார்த்து விட்டு; பல மந்திரம் கடந்து - பின்னும் பல வீடுகள் தாண்டி; தன் மனத்தின் முன் செல்வான் - தன் மனோவேகத்தை விட அதிவேகமாகச் செல்லும் அநுமன்; இந்திரன் இருந்த சிறைவாயிலின் கடை முன் - இந்திரசித்தனால் பிடித்து வைக்கப்பட்ட இந்திரன் சிறையிருந்த; சிறைக்கோட்ட வாயில் எதிரே நின்றான்.

***


ஏதியேந்திய தடக்கையர்
        பிறை எயிறு இலங்க
மூதுரைப் பெருங்கதைகளும்
        பிதிர்களும் மொழிவார்
ஓதில் ஆயிரம் ஆயிரம்
        முறுவலி அரக்கர்
காது வெஞ்சினக் களியினர்
        காவலைக் கடந்தான்.

இந்திரசித்தின் மாளிகைக்குக் கட்டுக் காவல் அதிகம். ஏன்? அங்கே தான் இந்திரன் சிறையிருக்கிறானே. ஆயிரக் கணக்கான அரக்கர்கள் ஆயுதம் ஏந்தியவராய் அம்மாளிகையைக் காத்து நிற்கின்றார். கள் குடித்து விட்டுப் பழங்கதை பல பேசிக் கொண்டிருக்கின்றனர். இத்தகைய காவலைத் தாண்டி உள்ளே செல்கிறான் அநுமன்.

***

ஓதில் - ஆராய்ந்து சொல்லப் போனால்; ஏதி ஏந்திய தடக்கையர் - ஆயுதங்கள் ஏந்திய அகன்ற கைகள் கொண்டவரும்; காது வெஞ்சிளக் களியினர் - பகைவரைக் கொல்ல-