பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114

யாவனோ? - வேறு எவனோ? அறியேன் - அறிகின்றேன் அல்லன்; (எவனே ஆயினும்) இளைய வீரனும் - இளைய வீரப் பெருமானாகிய லட்சுமணனும்; ஏந்தலும் - இராமபிரானும் ; இருவரும் - ஆகிய இருவரும்; பல நாள் உளையும் வெம் சமம் உளது - நீண்ட நாட்கள் இவனுடன் செய்ய வேண்டிய கொடிய போர் உளது; என உணர்ந்தான் - என்று அநுமன் உணர்ந்து கொண்டான்.

***


கரிய நாழிகை பாதியில்
        காலனும்
வெருவி யோடும் அரக்கர் தம்
        வெம்பதி
ஒருவனே ஒரு பன்னிரெண்டு
        யோசனைத்
தெருவு மும்மை நூறாயிரம்
        தேடினான்.

நடுநிசி. காலனும் அஞ்சும் அரக்கர் பதியில் அந்த நேரத்திலேயே அநுமன் ஒருவனாகவே மூன்று லட்சம் தெருக்களுள்ள, பன்னிரண்டு யோசனை விஸ்தீரணமுள்ள இலங்கையின் அக நகரிலே—அரசர் வாழும் பகுதியிலே—சீதா பிராட்டியைத் தேடினான்.

***

காலனும் வெருவியோடும் - யமனும் அஞ்சி ஓடத்தக்க; அரக்கர் வெம்பதி - அரக்கர்களுடைய அந்தக் கொடிய நகரிலே; கரிய நாழிகை பாதியில் - இரவின் நடுநிசியில்; ஒரு பன்னிரண்டு யோசனை - பன்னிரண்டு யோசனை விஸ்தீரணமுள்ள மும்மை நூறு ஆயிரம் தெருவும் - மூன்று லட்சம் தெருக்களிலும்; ஒருவனே - தான் ஒருவனாகவே (அநுமன்)