பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118

சீதை அல்லள். இவள் யக்ஷ மாதோ அல்லது அசுரப் பெண்ணோ என்று ஐயுறும் வண்ணம் இருக்கின்றாள். இராமன் மீது காதல் கொண்ட ஒருத்தி பால் காமன் திரும்புவானோ? திரும்பான். இவளைச் சீதை என்று நினைத்தது தவறு” என்று தனக்குள் கூறிக்கொண்டான்.

***

அவள் மானுயர் திருவடிவினள் - சீதையாகிய அவள் மானிடப் பெண்ணின் அழகிய உருவம் கொண்டவள்; இவள் - இவளோ; மாறு கொண்டனள் - அதற்கு மாறாக இருக்கின்றாள்; கூறல் - கூறப்போனால்; தான் இயக்கியோ - இவள் யக்ஷ மாதோ (அல்லது) தானவர் தையலோ-அசுரப் பெண்ணோ (என்று) ஐயுறும் தகை ஆனாள் - சந்தேகம் கொள்ளும்படியான வகையில் இருக்கின்றாள்; காரிகையர்க்கு - பெண்களுக்கு; கான் உயர்த்த - மணம் மிக்க; தார் இராமன் மேல் - மாலை யணிந்த இராமபிரானதுமேல்; நோக்கிய காதல் - சென்ற காதல்; மீன் உயர்த்தவன் - மீன் கொடி ஏந்திய மன்மதன்; மருங்குதான் - பக்கம்தான்; திரும்புமோ? - திரும்பாது; நினைந்தது மிகை - இவளைச் சீதை என்று நினைத்தது தவறு என்றான்.

***


கண்டனன்; காண்டலோடும்
        கருத்தின் முன் காலச் செந்தீ
விண்டன கண்கள் சிந்தி வெடித்தன;
        கீழு மேலும்
கொண்டதோர் உருவமாயோன்
        குறளினுங் குறுகி நின்றான்
திண்டலை பத்தும் தோள்கள்
        இருபதும் தெரிய நோக்கி