பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

119



முன்பு மகாவிஷ்ணு கொண்ட வாமனாவதாரத்தினும் குறுகிய வடிவத்துடன் நின்ற அநுமன், பத்துத் தலைகளும், இருபது கைகளும் கொண்டு விளங்கிய இராவணனைக் கண்டான். இவன்தான் இராவணன் என்று அறிந்தான். சினம் பொங்கியது. விழிகள் துடித்தன. தீப்பொறி கக்கின.

***

மாயோன் - திருமால்; கொண்டது - முன்னே மேற்கொண்ட; ஓர் உருவ - ஓர் உருவமாகிய வாமன வடிவத்தினும்; குறுகி - குள்ளமாகி; நின்றான் - அங்கு நின்றவனாகிய அநுமன்; திண்தலை பத்தும் - வலிய தலைகள் பத்தும்; தோள்கள் இருபதும்; தெரிய - தன் கண்களுக்குப் புலப்பட; நோக்கி - பார்த்து; கண்டனன் - இவன்தான் இராவணன் என்று அறிந்துகொண்டான்; காண்டலோடும் - அவ்வாறு அறியவே; கருத்தின் முன் - அவனுடைய எண்ணத்திலே; (சீற்றம் பொங்க) கண்கள் கீழும் மேலும் வெடித்தன - கண்களின் மேலும் கீழும் உள்ள இமைகள் துடித்தன. கால செந்தீ விண்டன - ஊழிக் காலத்துச் செந்தீயைக் கக்கின.

***


தோளாற்றல் என் ஆகும்?
        மேல் நிற்கும் சொல் என் ஆம்?
வாளாற்றற் கண்ணாளை
        வஞ்சித்தான் மணிமுடி என்
தாளாற்றலால் இடித்துத்
        தலைபத்தும் தகர்த்து உருட்டி
ஆளாற்றல் காட்டேனேல்
        அடியேனாய் முடியேனே.

“வாள் போலும் கண்ணுடைய சீதா பிராட்டியை வஞ்சனையால் கவர்ந்து வந்தவன் இவ்இராவணன்; வலிமை மிகுந்த எனது கால்களினாலே இவனை எட்டி