பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120

உதைத்து இவன் மணிமுடிகள் சிதறச் செய்து, தலைகள் பத்தும் தரையிலே உருளச் செய்யாவிடில் எனது தோள் வலி என் ஆவது? நான் இராமனின் அடிமை என்பதற்கு என்ன பொருள் இருக்கிறது?” இவ்வாறு அநுமன் தனக்குள் பேசிக் கொண்டான்.

***

(சினம் மிக்க அநுமன் தனக்குள் பின் வருமாறு கூறிக் கொண்டான்).

வாள் ஆற்றல் கண்ணாளை - வாள்போலும் ஆற்றல் அமைந்த கண்களையுடைய சீதா பிராட்டியை; வஞ்சித்தான் - வஞ்சனையால் கவர்ந்து வந்த இந்த இராவணனின்; மணிமுடிகள் - மணிகள் பதித்த கிரீடங்கள் பத்தையும்; என் தாள் ஆற்றலால் இடித்து - என் கால் வலிமையினால் சிதறச் செய்து; தலை பத்தும் - தலைகள் பத்தும்; சிதறி விழச் செய்து உருட்டி - தரையில் உருட்டி; ஆள் ஆற்றல் காட்டேனேல் - என் ஆண்மைத் திறத்தை இப்பொழுது காட்டேனாகில்; அடியேனாய் முடியேனே - நான் இராமபிரானுக்கு அடியவன் என்ற பெருமை இல்லாமல் போவேனே; (அன்றியும்) தோள் ஆற்றல் - என் தோள் வலிமைதான்; என் ஆகும் - எதற்குப் பயன்படும்? மேல் நிற்கும் சொல் என் ஆம்? - எதிர்காலத்தில் நிற்கும் புகழ் சொல் யாது ஆகும்?

***


நடித்து வாழ் தகை மையதோ
        அடிமை? நன்னுதலைப்
பிடித்த வாள் அரக்கனார்
        யான் கண்டும் பிழைப்பரோ?