பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124



“எல்லா இடமும் தேடிவிட்டேன். பிராட்டியைக் காணோமே” என்று விம்மி வருந்துகிறான்.

***

கொன்றானோ? கற்பு அழியாக்
        குலமகளைக் கொடும் தொழிலால்
தின்றானோ? எப்புறத்தே
        செறித்தானோ? சிறை சிறியேன்
ஒன்றானும் உணாகிலேன்; மீண்டு
        இனிப் போய் என் உரைக்கேன்?
பொன்றாத பொழுது, எனக்கு இக்
        கொடும் துயரம் போகாதால்.

“எங்கு தேடியும் காணவில்லையே! பிராட்டியை. மனம் உடைந்தான் அநுமன்.

“எங்கும் காணவில்லையே! கொன்று விட்டானோ? எங்கேனும் சிறை வைத்திருக்கிறானோ? ஒன்றும் தெரியவில்லையே! என்ன செய்வேன்? எப்படித் திரும்புவேன்? போய் இராகவனுக்கு என்ன பதில் சொல்வேன்? இத்துன்பத்துக்கு என்ன செய்வேன்? என் உயிரைவிட்டால் அன்றி இத் துன்பம் நீங்காது போலிருக்கிறதே?”

***

கற்பு அழியாக் குலமகளை - கற்பு அழியாத உயர் குலத்துப் பிறந்த சீதையை; கொன்றானோ - இராவணன் கொன்று விட்டானோ; கொடுந்தொழிலால் - நரமாமிசம் தின்னும் கொடிய செயலால்; தின்றானோ - தின்று விட்டானோ; எப்புறத்தே சிறை செறித்தானோ - எந்த இடத்திலே சிறை வைத்தானோ; சிறியேன் - சிறியேனாகிய நான்; ஒன்றானும் உணர்கிலேன் - ஒன்றும் அறிய முடியாதவனாயிருக்கிறேன்; இனி மீண்டு போய் - இனித் திரும்பிப் போய்; என் உரைக்கேன் - (இராமனிடம்) என்ன சொல்-