பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

127

கூரிய நுனியுள்ள வேலாயுதத்தை உடைய இராவணனும்; இவ் ஊரும் - இந்த ஊரும்; மெல் அரக்கின் - மெல்லிய அரக்கினால் செய்யப் பட்டவைப் போல; உருகி விழ - உருகித் தரையில் விழ; வெம் தழலால் வேய்கேனோ - வெப்ப மிக்க தீயால் பொசுக்க மாட்டேனோ?

***

வன் மருங்கில் வாள் அரக்கியர்
        நெருக்க அங்கிருந்தாள்
கன் மருங்கு எழுந்து என்றும்
        ஓர் துளி வரக் காணா
நன் மருந்து போல் நலன் அற
        உணங்கிய நங்கை
மென் மருங்குல் போல்
        வேறுள அங்கமும் மெலிந்தாள்.

அந்த அசோக வனத்திலே அரக்கியர் நடுவே சீதையைக் கண்டான் அநுமன். கற்பாறையிலே தோன்றி ! என்றுமே நீர்த்துளி காணாத சஞ்சீவினி மருந்துபோல விளங்கினாள் சீதை. பொலிவு இழந்து வாடி, மெலிந்து காணப்பட்டாள் அவள்.

***

கன் மருங்கு எழுந்து - (வலிய) கல்லிடத்து முளைத்து வளர்ந்து; என்னும் ஓர் துளி வர காணா - எப்பொழுதும் ஒரு துளி நீர் கூடத் தன்மேல் விழுந்து அறியாத; நல் மருந்து போல் - சிறந்த சஞ்சீவி மருந்து போல; நலன் உற உணங்கிய அழகு இன்றி வாடிய; நங்கை - சீதை; மெல் மருங்குப் போல் - அவளுடைய மெல்லிய இடை போல்; வேறு உள அங்கமும் - வேறாக உள்ள அவயவங்களும்; மெலிந்தாள் - மிகவும் இளைத்துப் போனவளாய்; மருங்கில் - பக்கங்களில்; வல் - வலிய; வாள் - வாள் ஏந்திய அரக்கியர் நெருக்க -