பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

133

குவிந்து சேர்ந்து; ஒரு சடை ஆகிய - ஒரு சடையாகத் திரிந்துள்ள; குழலாள் - கூந்தலையுடையவள்;

***

ஆவி அம் துகில் புனைவது ஒன்று
        அன்றிவேறு அறியாள்
தூவி அன்ன மென் புனலிடைத்
        தோய்கிலா மெய்யாள்
தேவு தெளி கடல் அமிழ்து
        கொண்டு அனங்கவேள் செய்த
ஓவியம் புகையுண்டதே
        ஒக்கின்ற உருவாள்.

அந்தச் சீதை தான் உடுத்திய ஆடை தவிர மாற்று ஆடை உடுத்தினாள் அல்லள்; ஸ்நானம் செய்தாள் அல்லள்.

பாற்கடலில் தோன்றிய அமிழ்தத்தை எடுத்து ஒரு பதுமையாகச் செய்கிறான் மன்மதன். அந்தப் பதுமை தூசி படிந்து மங்கி ஒளியிழந்து தோன்றினால் எப்படியிருக்குமோ அப்படி இருந்தாள்.

***

ஆவி அம் துகில் - உடலுக்கு உயிர் போல் சிறந்த ஆடை; புனைவது ஒன்று அன்றி - உடுத்தியது ஒன்றேயல்லாமல்; வேறு அறியாள் - வேறு ஒரு மாற்று ஆடை உடுத்து அறியாதவள்; தூவி அன்ன - காக்கை இறகு போன்ற; மென் புனலிடை - மெல்லிய நீரில்; தோய்கிலா மெய்யாள் - குளிக்காத உடல் உடையவள்; தேவு தெள் கடல் - தெய்வத் தன்மை பொருந்திய திருப்பாற் கடலில் தோன்றிய; அமிழ்து கொண்டு - தேவ அமிர்தத்தைக் கொண்டு; அனங்கவேள் செய்த - மன்மதன் செய்து அமைத்த; ஓவியம் - சித்திரம்; புகை உண்டதே ஒக்கின்ற - புகை படிந்து மங்கிப்-