பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

135


அழுக்குப் படிந்த இரத்தினம் போன்றவளும், சூரிய வெளிச்சத்தில் ஒளி மங்கிய சந்திரன் போன்றவளும், அழுக்கு மூடிய கூந்தலையுடையவளுமாகிய சீதா பிராட்டியை நோக்கினான் அநுமன். அவளது கற்பு நிலை கண்டான். வியந்தான். இவ்வாறு வியந்து பாராட்டி ஆங்கு ஓர் மரப்பொந்திலே ஒளிந்து நின்றான் அநுமன். அதுபோது அரக்கனாகிய இராவணன் வருகிறான்.

***

சிகர வண்குடுமி நெடுவரை எவையும்
        ஒரு விழித்திரண்டன சிவண
மகரிகை வயிரக் குண்டலம் அலம்பு
        திண்டிறல் தோள் புடை வயங்கச்
சகர நீர் வேலை தழுவிய கதிரின்
        தலை தொறும் தலைதொறும் தயங்கும்
வகைய பன் மகுடம் இளவெயில் எறிப்பக்
        கங்குலும் பகல் பட வந்தான்.

இருபது தோள்கள் கொண்டவன் இராவணன். அந்த இருபது தோள்களும் எத்தகைய காட்சி வழங்குகின்றன? நீண்ட மலைச் சிகரங்கள் எல்லாம் ஓரிடத்திலே சேர்ந்து வந்தன போன்ற காட்சி. அந்த இருபது தோள்களிலும் மகர மீன் வடிவாயுள்ள தோள் வளையல்கள்! வயிரம் பதித்த மகர குண்டலங்கள்! தலை ஒவ்வொன்றிலும் மகுடங்கள்! இள வெயில் போல ஒளி வீசுகின்றன. இப்படி அந்த அசோக வனத்துக்கு வந்தான் இராவணன்.

***

சிகர வண்குடுமி - சிகரங்களாகிய வளமுள்ள முடிகளை உடைய; நெடுவரை எவையும் - நீண்ட மலைகள் எல்லாம்; ஒரு வழி திரண்டன சிவண - ஓரிடத்திலே சேர்ந்து வந்தன போல; மகரிகை - மசர வடிவாய் உள்ள தோள் வளையல்-