பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

138

விழும் நீர் அருவி போல் இருந்தது. மார்பிலே விளங்கிய பூணூல் எப்படி இருந்தது? கருக் கொண்ட நீல மேகத்தைக் கிழித்துக்கொண்டு ஒளி வீசும் மின்னலைப் போல் இருந்தது.

***

நீல நிறக் குன்றின் - நீல நிறத்தை உடைய குன்றில்; நெடிது உடன் தாழ்ந்த - நீண்டு நெருங்கித் தாழ்ந்து விழும்; நீத்த வெள் அருவியின் - நீராகிய வெண்மை நிறம் பொருந்திய அருவி போல; நிமிர்ந்து - நீண்டு விளங்கிய; பால் நிறப் பட்டு மாலை உத்தரியம் - பால் போலும் வெண்மையான பட்டு மாலை போல் விளங்கும் மேலாடை; பசப்பு உற - நிற வேறுபாடு கொண்டு விளங்க; பசும்பொன் ஆரத்தின் - பசுமையான பொன்னால் செய்யப்பட்ட ஆரத்தில் விளங்கும்; மால் நிற மணிகள் - சிறந்த ஒளியோடு கூடிய இரத்தினங்கள்; இடையுற படர்ந்து - இடையிடையே படர்ந்து விளங்கி; வருகதிர் இளவெயில் பொருவ - உதய சூரியனின் இளம் வெயில் போல; சூல் நிற கொண் மூச் சுழித்து - கருக் கொண்ட நீல மேகத்தைக் கிழித்துக் கொண்டு; இடை கிழிக்கும் - அதனிடையே கிழித்து விளங்கும்; மின் என - மின்னலைப் போல; மார்பின் நூல் துளங்க - மார்பில் அணிந்துள்ள பூணூல் அசைய.

***

தோள் தொறும் தொடர்ந்த மகரவாய் வயிரக்
        கிம்புரி வலயமாச் சுடர்கள் நாள் தொறும்
சுடரும் கலி கெழு விசும்பின்
        நாளொடு கோளினை நக்கத்தாள்தொறும்