பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

139

தொடர்ந்து தழங்கு பொற் கழலின்
        தகையொளி நெடுநிலம் தடவகேடொறும்
தொடர்ந்த முறுவல் வெண்ணிலவின்
        முகமலர் இரவினும் கிளர

தோள் ஒவ்வொன்றிலும் வயிர மணிகள் பதிக்கப்பெற்ற கிம்புரி எனும் தோள் வளையல் அணிந்திருந்தான். அந்த வளையல் வீசும் ஒளி எப்படியிருந்தது? வானிலுள்ள மீன்களையும், கோள்களையும் நாவினால் நக்குவது போல் இருந்தது. காலிலே பூட்டியிருந்த வீரக் கழலின் ஒலியானது நிலத்தைத் தடவி வந்தது. தன்னைத் தொடர்ந்து வந்த சுற்றத்தினரையெல்லாம் பார்த்துப் புன்னகை பூத்தான். அந்த நிலவொளியிலே அவனது முகங்களாகிய தாமரை மலர்கள் அந்த இரவிலும் ஒளி வீசின.

***

தோள் தொறும் - ஒவ்வொரு தோளிலும்; தொடர்ந்த - பூணப்பெற்றுள்ள; மகர வாய் - மகர மீனின் வாய் வடிவாய் அமைந்துள்ள வயிர கிம்புரிவலய மாசுடர்கள் - வயிர மணிகள் பதிக்கப் பெற்ற கிம்புரி எனும் தோள் வளையல்களின் பெரும் சுடர்கள்; நாள்தோறும் - ஒவ்வொரு நாளும்; சுடரும் - ஒளி வீசுகின்ற; கலிகெழு விசும்பின் - மிகத் தழைந்த ஆகாயத்தில் உள்ள; நாளொரு கோளினை நக்க - நட்சத்திரங்களோடு கிரகங்களையும் தம் நாவினால் நக்குவன போல விளங்க; தாள் தொறும் தொடர்ந்து - இரண்டு கால்களிலும் பூட்டப்பெற்று; தழங்கு பொற் கழலின் - ஒலிக்கின்றதும் பொன்னால் செய்யப்பட்டதுமான வீரக்கழலின்; தகைஒளி - சிறந்த ஒளியானது; நெடு நிலம் தடவ - நீண்ட நிலத்தைத் தடவி வர; கேள் தொறும் தொடர்ந்த - தன்னுடன் வரும் சுற்றத்தார் ஒவ்வொருவரிடமும் தொடர்ந்து செல்கின்ற; முறுவல்