பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5




விம்மலுற்று அனையன் ஏவ
        வினவிய வந்தேன்” என்றான்,
எம் மலைக் குலமும் தாழ
       இசை சுமந்து எழுந்த தோளான்.

“இம் மலையிலே இருந்து வரும் சூரியன் மகனாகிய சுக்கிரீவனுக்கு ஏவல் செய்பவன் நான். உங்களது வருகை கண்டு அவன் பயந்துவிட்டான். நீவிர் யார் என்று அறிந்து வருமாறு என்னை ஏவினான்; வந்தேன்” என்றான். யார்? எம்மலைச் சிகரமும் தாழ்ந்து விடும்படி புகழ் தாங்கி எழுந்த தோளினனாகிய அநுமன்.

***

[ருக்ஷரஜஸ் எனும் குரங்கரசன் பெண் வடிவங்கொண்டான். சூரியன் அருளாலே ஒரு குழந்தையைப் பெற்றான். அவனே சுக்கிரீவன்.]

இம்மலை இருந்து வாழும் - இந்த மலையிலே இருந்து வாழ்கின்ற; எரி கதிர் பரிதி - வெம்மையாகிய கிரணங்கள் பரப்பும்; சூரியனின் செல்வன் - மகனாகிய சுக்ரீவனுக்கு ஏவல் செய்வேன் - பணி செய்பவன் நான்; தேவ! நும் வரவு நோக்கி - தேவ! நீவிர்வருதல் கண்டு; விம்மலுற்று - நடுங்கி; அனையன் ஏவ - அவன் ஏவ; வினவிய வந்தேன் - தங்களிடம் கேட்டு அறியவந்தேன் என்றான். எம்மலைக் குலமும் தாழ - எந்த மலைக் கூட்டமும் தாழ்வுறும்படி; இசை சுமந்து - புகழ் பெற்று; எழுந்த தோளான் - வளர்ந்து எழுந்த தோள்கள் உடைய அநுமன்.

***

இவ்வாறு அநுமன் சொன்ன உடனே, “இவன் கல்வி கேள்விகளில் சிறந்தவன். அந்தக் கல்வி கேள்விக்கு ஏற்ப அடக்கமுடையவன்; அறிவுடையவன்” என்று உய்த்துணர்ந்த இராமன் இளைய பெருமாளிடம் சொல்கிறான்; ‘தம்பீ! லட்சுமணா! இவன் கலைவல்லான்! வேதம்