பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

142



அந்தியில் - மாலைப் போதில்; அனங்கன் - மன்மதன்; அழல் பட துரந்த - நெருப்பு எனச் சுட ஏவிய; அயில் முகப்பகழி வாய் அறுத்த - கூரிய நுனியுடைய அம்பு கொண்டு அறுத்த; வெந்துறு புண்ணில் - வெந்திருக்கிற புண்களில்; வேல் நுழைந்தென்ன - வேல் நுழைந்தாற் போல; வெண்மதி பசும் கதிர் விரவ - வெண்மையான சந்திரனுடைய குளிர்ந்த நிலவு கலந்து கொள்ள; மத்தமாருதம் - இளம் தென்றல் காற்று; மலர் தொறும் போய் - ஒவ்வொரு மலரினும் சென்று; வாரிவரு - வாரிக் கொண்டு வருகிற; வயங்கு நீர் வாரியின் - விளங்கும் நீரையுடைய மழை போன்ற: தேன் - தேனின்றும்; சிந்து நுண் துளியின் - சிந்துகிற நுண்ணிய துளிகளின்; சீகரத்திவிலை - சில் என்ற திவிலைகளால்; உருக்கிய செம்பு எனத் தெறிப்ப - பழுக்கக் காய்ச்சி உருக்கிய செம்பு வீழ்வது போல் தன் மேல் தெறிக்க.

***


மாலையும் சாந்தும் கலவையும் பூணும்
        வயங்க நுண்தூசொடு காசும் சோலையின்
தொழுதிக் கற்பகத்தருவும்
        நிதிகளும் கொண்டுபின் தொடர பாலின்
வெண் பரவைத்திரை கருங்கிரிமேல்
        பரந்தெனச் சாமரை பதைப்ப
வேலை நின்றுயரும் முயலில்வான் மதியின்
        வெண்குடை மீதுற விளங்க

இரு புறமும் வெண் சாமரம் வீசுகிறார்கள். அது எப்படியிருந்தது? பாற்கடலிலே எழும் வெண்மை பொருந்திய அலைகள் கரிய மலைமேல் படிவதுபோல் இருந்தது. களங்கமற்ற பூரண சந்திரனைப் போலே அவனது தலைக்குமேல் வெண்கொற்றக் குடை பிடித்து வந்தார்கள். அவனுக்குப் பின்னே சங்கம் பதுமம் ஆகிய