பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

143

நவநிதிகளையும், மலர்களையும், சந்தனமும், அணிகளையும் , இரத்தினங்களையும் மெல் ஆடைகளையும் கொண்டு வந்தார்கள்.

***

சோலையின் தொழுதி கற்பகத் தருவும் - சோலை போல் அடர்ந்த கற்பக விருஷமும்; நிதிகளும் - சங்கம் பதுமம் ஆகிய நவநிதிகளும்; மாலையும் - பலவித மலர்மாலைகளும்; சாந்தும் - சந்தனமும்; கலவையும் - பலவித வாசனைக் கலவைகளும்; பூணும் - அணிகளும்; வயங்கு நுண் துரசொடு காசும் - விளங்கும் மென்மையான ஆடைகளுடன் இரத்தினங்களையும்;கொண்டு பின் தொடர -எடுத்துக் கொண்டு பின்னே தொடர்ந்துவர, பாலின் பரவை வெண்திரை - பாற்கடலின் வெண்மையான அலைகள்; கரும் கிரிமேல் பரந்தென - கரிய மலைமேல் படிந்தாற் போல; சாமரை பதைப்ப - சாமரங்கள் இருபுறமும் அசைந்து வீச; வேலை நின்று உயரும் - கடலிலிருந்து மேலே உயர்ந்து தோன்றும்; முயல் இல்வால் மதியின் - முயல் எனும் கறை இல்லாத வெண்மதி போல; வெண்குடை மீது உற விளங்க - வெண்கொற்றக்குடை மேலே விளங்க.

***


விரிதளிர் முகை பூ கொம்பு அடைமுதல் வேர்
        இவை யெலாம் மணிபொனால் வேய்ந்த
தருவுயர் சோலை திசைதொறும் கரியத்
        தழல் உமிழ் உயிர்ப்பு முன் தவழத்
திருமகள் இருந்ததிசை அறிந்திருந்தும்
        திகைப்புறு சிந்தையால் கெடுத்தது
ஒரு மணி தேடும் பஃறலை அரவின்
        உழை தொறும் உழைதொறும் உலாவி