பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

145

செய்தான். தன்னை அடிமையாக ஏற்கவேண்டும் என்று கெஞ்சினான்.

அப்போது சீதா பிராட்டி அவ் இராவணனுடன் நேரில் பேசினாள் அல்லள். ஒரு துரும்பைக் கிள்ளிப் போட்டாள். போட்டு அதனை முன்னிலைப் படுத்திப் பின்வருமாறு சொல்கிறாள்.

***


மேருவையுருவ வேண்டின்
        விண்பிளந்து ஏக வேண்டின்,
ஈரோடு புவனம் யாவும்
        முற்றுவித்திடுதல் வேண்டின்,
ஆரியன் பகழி வல்லது
        அறிந்திருந்து அறிவிலாதாய்
சீரிய அல்ல சொல்லித்
        தலை பத்தும் சிந்து வாயோ?

மேரு மலையைத் துளைக்க வேண்டுமா? வானத்தைப் பிளந்து செல்ல வேண்டுமா? ஈரேழு பதினான்கு உலகங்களையும் அழிக்க வேண்டுமா? இராமபாணம் ஒன்றே இவற்றை செய்யவல்லது. இதை நீ அறிவாய். அறிந்தும் அறியாதார்போல என்னிடம் தகாத வார்த்தை பேசி உன் தலைகள் பத்தும் சிந்துவாயோ?

***


அறிவு இலாதாய் - அறிவு இல்லாதவனே; ஆரியன் பகழி - இராமனின் அம்பு; மேருவை உருவ வேண்டின் - மேரு மலையைத் துளைத்துச் செல்ல விரும்பினாலும்; விண் பிளந்து ஏக வேண்டின் - வானம் பிளந்து அப்பால் செல்ல விரும்பினாலும்; ஈர் ஏழு புவனம் யாவும் - பதினான்கு உலகங்களையும்; முற்று வித்திடுதல் வேண்டின் –

கி.—10