பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

149

வந்தாய்; உஞ்சனை போதி ஆகில் - நீ உன் உயிர் பிழைத்துப் போக விரும்பினால்; விடுதி - என்னை இராமனிடம் கொண்டு போய் விட்டுவிடுவாய்; உன் குலத்துக்கெல்லாம் நஞ்சினை - உனது குலமாகிய அரக்கர்களுக்கு எல்லாம் விடமாகிய இராமனை; எதிர்ந்தபோது - எதிர்த்து நின்று போர் செய்யும்போது; நோக்குமே நினது நாட்டம் - உனது கண்கள் நேர் நின்று அவனைப் பார்க்கும் திறமை உடையன ஆகுமோ? (ஆகா).

***


பெற்றுடை வரனும் நாளும்
        பிறந்துடை உரனும் பின்னும்
மற்றுடை எவையும் தந்த
        மலரவன் முதலோர் வார்த்தை
விற்றொடை இராமன் கோத்து
        விடுதலும் விலக்குண்டு எல்லாம்
இற்றுடைந்து இறுதல் மெய்யே
        விளக்கின் முன் இருள் உண்டாமோ.

ஏராளமான வரங்களைப் பெற்றுள்ளோம் என்று இறுமாப்புக் கொள்ளாதே. அரக்கர் குலத்தில் பிறந்துளதால் மிகுந்த வலிமையுடையோம் என்று நினையாதே! பிரம தேவனிடம் நீண்ட வாழ்நாள் பெற்றுவிட்டோம் என்று கர்வம்கொள்ளாதே. இவை எல்லாம் இராமனின் அம்பு கண்ட அளவில் விலகும் என்பது திண்ணம். விளக்கு வந்தால் இருள் இருக்குமோ?


***

பெற்றுடை வரனும் நாளும் - நீ பெற்றுள்ள வரங்களும் வாழ்நாளும்; பிறந்து உடை உரனும் - (அரக்கர் குலத்திலே) பிறந்து அப்பிறப்பால் அடைந்த வலிமையும்; பின்னும் மற்று உடை எவையும் - பிறகு நீ அடைந்த எல்லாவற்றை-