பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

வல்லான்; எல்லாக் கலைகளையும் அறிந்தவன் இவன்; வேதங்கள் எல்லாவற்றையும் ஓதி உணர்ந்தவன். இது இவனுடைய சொற்களினாலே தெரிகிறது. இந்தச் சொல்லின் செல்வன் யாராயிருக்கலாம்? இவன் பிரம தேவனோ? சிவபெருமானோ? இவன் நமக்களிக்கின்ற இந்தப் பிரம்மசாரி உருவம் நிச்சயமாக இவனுடைய சுய உருவம் அன்று. இவன் உலகின் அச்சாணி போன்றவன். போகப் போகத் தெரியும்.’’ என்று சொல்கிறான். இவ்விதம் சொல்லிய பின் அநுமனை நோக்கி வினவுகிறான்.

***




எவ்வழி இருந்தான் சொன்ன
        கவிக் குலத்து அரசன்? யாங்கள்
அவ் வழி அவனைக் காணும்
        அருத்தியின் அணுக வந்தேம்
இவ்வழி நின்னையுற்ற
        எமக்கு நின் இன் சொல் அன்ன
செவ்வழி உள்ளத் தானைக்
        காட்டுதி தெரிய என்றான்.

“நீ சொன்ன கவிக்குலத்து அரசன் எங்கே இருக்கிறான்? நாங்கள் அவனைப் பார்க்க விரும்புகிறோம். அவனை நீ எங்களுக்குக் காட்டுவாயாக” என்று கூறினான் இராமன்.

***

நீ சொன்ன - நீ கூறிய, கவிக்குலத்து அரசன் - குரங்குகளின் அரசன்; எவ்வழி இருந்தான் - எந்த இடத்திலே இருக்கிறான்? யாங்கள் - நாங்கள்; அ வழி அவனைக் காணும் - அவ்விடம் சென்று அவனைப் பார்க்கின்ற; அருத்தியின் - ஆசையோடு; அணுக வந்தேம் - நெருங்கி வந்திருக்கிறோம்; இ வழி . இந்த இடத்திலே: நின்னை