பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

163

அந்த மோதிரத்தையே உற்று நோக்குவாள், நுவலக் கருதும் - அதனோடு பேச நினைப்பாள்; ஒன்றும் நுவல் கில்லாள் - ஒன்றும் பேச முடியாமல் மெளனமாயிருப்பாள்; மேக்கு நிமிர் விம்மலள் - மேலும் மேலும் விம்முவாள்; விழுங்கல் உறுகின்றாள் - விம்மலை விழுங்க முயல்கிறாள், முடியவில்லை.

***


“பாழிய பணைத்தோள் வீர!
        துணை கிலேன் பரிவு தீர்த்த
வாழிய வள்ளலே! யான் மறு
        இலா மனத்தேன் என்னின்
ஊழி ஓர் பகலாய் ஓதும்
        யாண்டு எலாம் உலகம் ஏழும்
ஏழும் வீவுற்ற ஞான்றும்
       இன்று என இருத்தி” என்றாள்.

“வீங்கிய தோள்களை உடைய வீரனே! என் துன்பம் தீர்த்த வள்ளலே! நீ வாழ்க!

இந்த ஈரேழு பதினான்கு உலகங்களும் அழிந்தாலும் இன்றுபோல் என்றும் சிரஞ்சீவியாய் இருப்பாயாக!”

***

பாழிய பணைத் தோள் வீர - வலிமை பொருந்திய பருத்த தோள்களை உடைய வீரனே; துணை இலேன் பரிவு தீர்த்த வள்ளலே - ஒரு துணையும் இல்லாதவளாய்; துன்புற்றிருக்கும் - எனது துன்பம் தீர்த்த வள்ளலே; வாழிய - நீ வாழ்வாயாக; யான் மறு இலா மனத்தேன் என்னின் - கற்பு நிலையில் களங்கமில்லாத மனத்தை உடையேன் ஆனால்; ஊழி ஓர் பகல் ஆய் ஓதும் யாண்டு எலாம் - பல