பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

165

வீரன் - இரகுவீரனாகிய இராமன்; இளவலோடும் யாண்டை யான்? - இளைய பெருமாளோடு எங்கே இருக்கிறான்? எவ்வழி எய்திற்று உன்னை - உன்னை அடைந்தது எப்படி? ஆண்டகை அடியேன் தன்னை யார் சொல அறிந்தான்? - ஆடவரில் சிறந்த இராமபிரான் என் நிலையை யார் சொல்ல அறிந்தான்? என்றாள் - என்று கேட்டாள். தூண் திரண்டனையை தோளான் - தூண் திரண்டு உள்ளன போன்ற தோள்களை உடைய அநுமனும்; உற்றது சொல்லலுற்றான் - மான் பின்னே சென்றது முதல் அதுவரை நிகழ்ந்தவற்றையெல்லாம் சொல்லத் தொடங்கினான்.

***


இன்னும் ஈண்டு ஒரு
        திங்கள் இருப்பல் யான்
நின்னை நோக்கிப் பகர்ந்தது
        நீதியோய்
பின்னை ஆவி பிடிக்கின்றிலேன்
        அந்த
மன்னன் ஆணை இதனை
        மனக்கொள் நீ.

“நீதி நெறி நிற்பவனே! நான் இன்னும் ஒரு மாத காலம் வரையில் தான் இங்கே உயிரோடு இருப்பேன். இந்த ஒரு மாத காலத்துக்குள் இராமன் வந்து மீட்காவிடில் நான் உயிர் விடுவது திண்ணம். மன்னனாகிய இராமபிரான் மீது ஆணையிட்டுச் சொல்கிறேன். இதை நீ உறுதியாக உன் மனத்தில் கொள்வாயாக.”

***

நீதியோய் - நீதி நெறி நிற்பவனே! யான் இன்னும் ஒரு திங்கள் ஈண்டு இருப்பல் - இன்னும் ஒரு மாத காலமே நான்