பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

166

இங்கே இருப்பேன். பின்னை ஆவி பிடிக்கின்றிலேன் - பிறகு உயிரோடிருக்கமாட்டேன்; அந்த மன்னன் ஆணை - அந்த இராமபிரான் மேல் ஆணையிட்டுச் சொல்கிறேன்; நின்னை நோக்கிப் பகர்ந்தது இதனை - உன்னைப் பார்த்துச் சொன்ன இந்த உறுதியை; நீ மனக்கொள் - உன் மனதிலே திடமாக வைத்துக் கொள்வாயாக.

***


ஆரந்தாழ் திரு மார்பற்கு
        அமைந்த தோர்
தாரந்தான் அலள் ஏனும்
        தயா என்னும்
ஈரம் தான் அகத்தில்லை
        என்றாலும் தன்
வீரம் காத்தலை வேண்டு
        என்று விளம்புவாய் நீ.

இராமபிரானுடைய மனைவி நான். என்னை மீட்டுச் செல்ல வேண்டும் என்கிற கடமைக்காக இல்லாவிட்டாலும் என் மீது கருணை என்ற ஈரப்பசை தன் நெஞ்சிலே இல்லா விட்டாலும் தன்னுடைய வீரத்தை நிலை நாட்டுதற் பொருட்டாவது இங்கு வந்து போரிட்டு என்னை மீட்கச் சொல்லு.

***

ஆரம் தாழ் திரு மார்பற்கு - மாலையணிந்த அழகிய மார்புடைய இராமபிரானுக்கு; அமைந்தது - ஏற்ற; ஓர் தாரம் தான் அலள் ஏனும் - மனைவி என்ற முறையில் அல்லாவிடினும்; தயா எனும் ஈரம் தான் அகத்தில்லை என்றாலும் தயை என்கிற ஈரப்பசை மனத்தில் இல்லாவிடினும்; தன் வீரம் காத்தலை - தனக்கே உரிய வீரத்-