பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

170



சிந்தையாலுந் தொடேன்
        என்ற செவ்வரம்
தந்த வார்த்தை
        திருச் செவி சாற்றுவாய்.

அந்த நாளிலே மிதிலா நகரிலே வந்து என் கரம் தொட்டு மணம் முடித்தபோது, இப் பிறவியிலே மற்றொரு மாதைச் சிந்தையாலும் நினையேன் என்று அளித்த வரத்தை அவர் காதிலே மெல்லச் சொல்லுவாய்.

***

வந்து எனைக் கரம் பற்றிய வைகல்வாய் - இராமபிரான் மிதிலா நகரிலே வந்து எனை மணந்து கொண்ட அந்த நாளில்; இந்த இப் பிறவிக்கு - இந்த மானிடப் பிறவியில்; இரு மாதரை - இரண்டாவது பெண்ணை; சிந்தையாலும் தொடேன் - மனத்தாலும் நினைக்க மாட்டேன்; என்ற - என்று உறுதிமொழி; செவ்வரம் தந்த வார்த்தை - சிறந்த வரம் போன்ற செய்தியை; திருச்செவி - அவர் காதிலே; சாற்றுவாய் - (மெல்ல) சொல்லுவாய்.

***

ஈண்டு நான் இருந்து
        இன் உயிர் மாயினும்
மீண்டு வந்து பிறந்து
        தன் மேனியைத்
தீண்டலானதோர்
        தீவினை தீர் வரம்
வேண்டினாள் தொழுது
        என்று விளம்புவாய்
.

இந்த இலங்கையிலே இருக்கும் என்னை நீங்கள் மீட்காமல் நானும் இறந்து படுவேனாயின், மீண்டும் வந்து