பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

173

வேண்டுவது அன்று - அது வேண்டுவது இல்லை; யான் விரைவில் வீரனைக்காண்டவே குறைவு - நான் விரைந்து சென்று வீரனான இராமபிரானை காண்பது ஒன்று தான் குறைவு; பின் காலம் வேண்டுமோ - அதற்குப் பிறகு கால தாமதம் வேண்டுமோ? (வேண்டாம்) ஆண்டகை - இராம பிரான்; இனி ஒரு பொழுதும் ஆற்றுமோ - ஆடவரிலே சிறந்த இராமபிரான் இனி ஒரு கணமும் பொறுத்திருப் பாரோ? (இருக்கவே மாட்டார்)

***

ஆவி உண்டு என்னும்
        ஈதுண்டு உன் ஆருயிர்ச்
சேவகன் திருவுருத்
        தீண்டத் தீந்திலாப்
பூவிலை; தளிரிலை;
        பொரிந்து வெந்திலாக்
காவிலை; கொடியிலை
        நெடிய கானெலாம்.

இராமபிரான் உயிருடன் இருக்கிறான் என்று மட்டும் கூறலாமேயன்றி வேறு எதுவும் கூறிவிட முடியாது. உணர்ச்சியற்றவனாயிருக்கிறான். அவனது விரகத் தீயால் அவன் தீண்டிய சோலை, கொடி, தளிர், பூ எல்லாம் எரிந்து போயின; பொரிந்து போயின; வெந்து போயின.

***

ஆவி உண்டு - இராமபிரானுக்கு உயிர் உள்ளது; என்னும் ஈது உண்டு - என்று சொல்வதற்கு அடையாளம் உண்டு (அவ்வளவு தான்); நெடிய கான் எலாம் - நீண்ட காடு எங்கும்; உன் ஆருயீர் சேவகன் - உன் அரிய உயிர் போன்ற மகாவீரன் இராமனுடைய திருஉரு - அழகிய திருமேனி; தீண்ட-படுவதால்; தீந்து இலா - எரித்து போகாத; பூ இலை தளிர் இலை - பூவும் இல்லை; தளிரும் இல்லை; பொரிந்து