பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

174

வெந்திலா - பொரிபோலாகி வெந்து; போகாத; காஇலை சோலை இல்லை; கொடி இலை - கொடிகளும் இல்லை.

***

மத்துறு தயிரென
       வந்து சென்றிடை
தத்துறும் உயிரொடு
       புலன்கள் தள்ளுறும்
பித்த நின் பிரிவினில்
       பிறந்த வேதனை
எத்தனை உள அவை
       எண்ணும் ஈட்டவோ?

உன்னுடைய பிரிவினால் இராமன் அடைந்துள்ள துன்பம் இவ்வளவு என்று சொல்ல முடியாது. புலன்கள் எல்லாம் தன் செயலற்று உணர்ச்சியற்றுப் பித்துப்பிடித்தவன் போலிருக்கிறான். மத்தினால் கடையப் பெறும் தயிர் எப்படி குழம்புமோ அப்படிக் குழம்பியிருக்கிறான்.

***

மத்து உறு தயிர் என - மத்தினால் கடையப்படும் தயிர் குழம்புவது போல; வந்து சென்று குடை தந்துறும் - முன்னும் பின்னும் சென்று இடையே தடுமாறி உழலும்; உயிர் ஒடும் - உயிரினோடும்; புலன்கள் தள்ளுறும் பித்தம் - ஐம்புலன்களும் தள்ளப்பட்டு உணர்ச்சியற்று நிற்கும் பைத்திய நிலை; எத்தனை உள - எத்தனை விதம் உள்ளனவோ; அவை - அவை எல்லாம்; நின் பிரிவினில் பிறந்த வேதனை - உன் பிரிவினால் இராமபிரானுக்கு உண்டான வேதனைகளே; எண்ணும் சட்டவோ? - அவை மனத்தினால் சிந்தித்துப் பார்க்கவும் கூடியனவோ?

***