பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

181


மரங்கள் சில முறிந்தன; வேறு சில பிளந்தன. மற்றும் சில கீழ் மேலாகக் கவிழ்ந்தன; துண்டு துண்டாயின. வேறோடு பிடுங்கப்பட்டு பெயர்ந்து ஓடின; வெந்தன சில; விண்ணில் பறந்தன சில; கடலில் வீழ்ந்தன சில; அரக்கர் மாளிகைகள் மேல் விழுந்து அவற்றைத் தகர்த்தன சில;

ஆனைக் கட்டும் இடங்களும், ஆடல் அரங்குகளும், அரக்கர் மதுபானம் செய்யும் இடங்களும், குதிரை லாயங்களும் நாசமாயின. எதனால்? அநுமன் பிடுங்கி வீசிய மரங்களால்.

பருவங்கள் ஆறு. கார், கூதிர், முன்பனி, பின்பனி. இளவேனில், முதுவேனில் என்பன. இந்த ஆறு பருவங்களுக்கும் உரிய தேவர் அறுவர். இந்த அறுவரும் இராவணனுடைய கட்டளைப்படி அந்த அசோகவனத்தைக் காவல் புரிந்து வந்தனர். அந்த வனத்தை மாருதி அழித்தது கண்டு அஞ்சினர் அவர். இராவணனிடம் சென்று கூறினர்.

இராவணன் சீறினான். எண்பதாயிரம் கிங்கரர்களை ஏவினான்.

“அந்த குரங்கு தப்பி ஓட முடியாதபடி வழியடைத்து அதைக் கொல்லாமல் உயிருடன் பிடித்து வருக” என்று கட்டளையிட்டான்.

வெகு வேகமாக வந்த அக் கிங்கரர்களை வெகுசீக்கிரத்தில் யமனுலகுக்கு அனுப்பினான் அநுமன். பிறகு சம்புமாலி வந்தான். அவனையும் யமனு லகுக்கு அனுப்பினான் அநுமன். சம்புமாலியைத் தொடர்ந்து பஞ்ச சேனாபதிகள் பெரும் படையுடன் வந்து அழிந்தார்கள்.

இந்திரசித்தின் தம்பியும் மண்டோதரியின் இளையகுமாரனுமாகிய அக்ஷய குமாரன் வந்து அநுமனுடன் போரிட்டான். அவனும் யமனுலகு சென்றான். கடைசியாக இந்திரசித்து வந்தான். போரிட்டான். பிரமாஸ்திரத்தால்