பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

188

"அத்தகைய சக்கரவர்த்தித் திருமகனுக்கு ஏவல் செய்பவன் நான். அநுமன் என்பது என் பெயர். சீதையைத்தேடி நான்கு திக்கிலும் சென்ற வானர சேனைகளில் தெற்கு நோக்கி வந்த சேனைத் தலைவன் வாலியின் மகன். அவனுடைய தூதன் நான். தனியே வந்துளேன்" என்றான்.

***

அன்னவர்க்கு அடிமை செய்வேன் - அத்தன்மையனான சக்கரவர்த்தி திருமகனுக்கு அடிமைத் தொழில் செய்பவன் யான்; நாமமும் , அநுமன் என்பேன் - அநுமன் எனும் பெயர் உடையேன்; நல்நுதல் தன்னைத் தேடி - அழகிய நெற்றியுடைய சீதையைத் தேடி நால் பெரும் திசையும் போந்த - பெரிய திசை நான்கும் சென்ற; மன்னரில் - தலைவரில்; தென்பால் வந்த தானைக்கு - தென் திசை நோக்கி வந்த சேனைக்கு; மன்னன் - தலைவன்; வாலிதன் மகன் - வாலியின் மகன் அங்கதன் ஆவான்; அவன் தன் தூதன் - அவனது தூதனாய்; தனியேன் வந்தனன் - தனி ஒருவனாக வந்தேன் தான்; என்றான் - என்று சொன்னான்.


***

என்றலும் இலங்கை வேந்தன்
        எயிற்றினம் எழிலி நாப்பண்
மின் திரிந்தது என்ன நக்கு
        வாலி சேய் விடுத்த தூத!
வன் திறல் ஆய வாலி வலியன்
        கொல்? அரசின் வாழ்க்கை
நன்று கொல்? என்ன யோடும்
        நாயகன் தூதன் நக்கான்.

என்று இவ்வாறு அநுமன் சொல்லக் கேட்டான் இராவணன். கருமேகத்தின் ஊடே மின்னல் பளிச்சென்றது போல பல்லைக் காட்டிச் சிரித்தான்.