பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

191

வேந்தன் – இப்போது எங்கள் அரசன்; சூரியன் தோன்றல் – சூரிய குமாரனாகிய சுக்கிரீவன்; என்றான்.

***

என்னுடைய ஈட்டினால் அவ்
        வாலியை எறுழ்வாய் அம்பால்
இன்னுயிர் உண்டது? இப்போது
        யாண்டையான் இராமன் என்பான்
அன்னவன் தேவி தன்னை
        அங்கதன் நாடல் உற்ற
தன்மையை உரை செய்க என்னச்
        சமீரணன் தனயன் சொல்வான்.

அந்த வாலியை இராமன் கொன்றது ஏன்? இராமன் மனைவி சீதையை அங்கதன் தேடி வந்த காரணம் என்ன? விளக்கமாகச் சொல் என்று கேட்டான் இராவணன். அநுமன் சொல்லத் தொடங்கினான்.

***

இராமன் என்பான் – இராமன் என்று சொல்லப்படுகிறவன்; எறுழ்வாய் அம்பால் – வலிமை பொருந்திய அம்பினாலே; அவ்வாலியை இன் உயிர் உண்டது – அந்த வாலியைக் கொன்றது; என் உடை ஈட்டினால் – என்ன கருதி? இப்போது யாண்டையான் – அந்த இராமன் இப்போது எங்கே இருக்கிறான்? அன்னவன் தேவி தன்னை – அவனுடைய தேவியாகிய சீதையை; அங்கதன் நாடல் உற்ற தன்மையை – அங்கதன் தேடி வந்த நிலையை; உரை செய்க என்ன – சொல்வாயாக என; சமீரணன் தனயன் – வாயுபுத்திரனாகிய அநுமன்; சொல்வான் – பின் வருமாறு சொல்லத் தொடங்கினான்.

***