பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

196



தெளிந்த அறிவுடைய பலரும் விரும்பும் சிறப்புக்கள் பொருந்தியவனே! நீ பெற்ற மூன்றரைக் கோடி வாழ்நாளும் மூவுலகாளும் இச்செல்வமும் அழிய எளியவன் போலாகி இழித்து நகைத்தற்கான செயலில் நுழைய விரும்புகிறாயா?

***

தேறினார் பலர் – தெளிந்த ஞானமுடையோர் பலரும்; காமிக்கும் – விரும்பும்; செவ்வியோய் – சிறந்த குணங்களை உடையவனே; ஈறில் நாள் உக – அந்தமில்லாத உனது மூன்றரைக் கோடி ஆயுளும் சிந்தி அழிய; எஞ்சல் இல் நல் திருநூறி – குறைவு படாத மூவுலகாளும் நல்ல செல்வங்களையும் அழித்துக் கொண்டு; நொய்தினை ஆகி – எளியவனாகி; வேறும் – இப் பெருவாழ்வினை விட்டு வேறாகிய இன்னும் நகை ஆம் – இன்னும் நகைப்புக்கு இடமாகிய; வினை தொழில் – செய்கையில்; நுழைதியோ – நுழைய விரும்புகிறாயா?

***

ஆதலால் தன்
        அரும் பெறல் செல்வமும்
ஓது பல் கிளையும்
        உயிரும் உறச்
சீதையைத் தருக என்னச்
        செப்பினான்
சோதியான் மகன்
        நிற்கு என்று சொல்லினான்.

“பெறுதற்கு அரிய இச்செல்வமும், உனது சுற்றமும், உனது உயிரும் நிலைத்திருக்க வேண்டுமானால் இராமபிரானிடம் சீதையைக் கொண்டுவந்து கொடுத்துவிடு. என்று உனக்குச் சொல்லுமாறு என் மூலம் சொல்லி