பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

199



அநுமனின் வாலிலே துணியைச் சுற்றினார்கள் அரக்கர்கள். தீ வைத்தார்கள். “இதுவும் நன்மைக்கே” என்று எண்ணினான் அநுமன். மாட மாளிகைகள் மீது தாவினான். இலங்கையைத் தீக்கிரையாக்கினான். இலங்கை தீப்பற்றி எரிந்தது.

***

வில்லும் வேலும் வெங்குந்தமும்
        முதலிய விறகாய்
எல்லுடைச் சுடர் எனப் புகல்
        எஃகெலாம் உருகித்
தொல்லை நன்னிலை தொடர்ந்த
        பேருணர்வினார் தொழில் போல்
சில்லி உண்டையில் திரண்டன
        படைக்கலத் திரள்கள்.

வில், வேல், எரி ஈட்டி முதலிய ஆயுதங்கள் எல்லாம் தீயிலே விறகுகளாய் எரிந்தன. அவற்றின் எஃகு பாகங்கள் உருகித் தம் பழைய நிலையாகிய உருண்டை வடிவம் பெற்றன. அது எப்படியிருந்தது? பெரிய ஆத்ம ஞானிகள் தங்கள் கர்மவசத்தினால் பல்வேறு பிறவிகளில் உழன்று பின் தம் பண்டை உயரிய நிலை அடைவதுபோல் இருந்தது.

***

வில்லும் வேலும் – ஆயுதசாலையிலே இருந்த விற்களும் வேல்களும்; குந்தமும் – கொடிய எரியீட்டிகளும்; முதலிய – முதலிய படைக்கலங்கள் எல்லாம்; விறகாய் – விறகுகளாய் அமைய; எல் உடை சுடர் எனப் புகல் – ஒளியையுடைய சூரியன் என்று சொல்லும்படியாக; எஃகு எலாம் உருகி –