பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

200

எஃகினால் அமைந்த அவற்றின் பகுதிகள் யாவும் உருகி; படைக்கல திரள்கள் – ஆயுதத் தொகுதிகள்; தொல்லை நல் நிலை தொடர்ந்த – (பல்வேறு பிறவிகளில் உழன்றபின்) தமது பழைய உயர் நிலையை நாடிச் சென்ற; பேர் உணர்வினர் தொழில்போல் – பெரிய ஆத்மஞானிகளின் செயலே போல; சில்லி உண்டையில் (அவற்றின் பழைய நிலையாகிய) சிறு உண்டையாக; திரண்டன – திரண்டு கிடந்தன.

***

செய்துடர்க்கன வல்லியும்
        புரசையும் சிந்தி
நொய் தினிட்டவன் தறி பறித்து,
        உடல் எரி நுழைய
மொய் தடச் செவி நிறுத்தி
        வான் முதுகினின் முறுக்கிக்
கையெடுத்து அழைத்தோடின
        ஓடை வெங்களிறு.

யானைகள் தீயின் தகிப்புத் தாங்க முடியாமல் சங்கிலிகளை அறுத்துக்கொண்டு, கட்டுத் தறிகளைப் பிடுங்கிக் கொண்டுவாலை, முறுக்கி, துதிக்கை தூக்கிக் கதறி ஓடின.

***

ஓடை வெம் களிறு – நெற்றி பட்டம் அணிந்த கொடிய யானைகள்; உடல் எரி நுழைய – தம் உடலிலே தீப்பிடித்து எரிய; துடர் செய் கனவல்லியும் – சங்கிலியாகச் செய்யப்பட கனமான பூட்டு விலங்கையும்; புரசையும் – கழுத்திலுள்ள கயிற்றையும்; சிந்தி – சிதறவிட்டு; நொய்தின் இட்டவல் தறி – தம்மைக் கட்டியிருந்த வலிய கம்பங்களை; பறித்து – எளிதில் பறித்து எறிந்து; மொய் தடசெவி நிறுத்தி – வலிய அகன்ற தம் காதுகளை மேலே தூக்கி நிறுத்தி; வால் முதுகினில் முறுக்கி – தம் வால்களை முதுகுப்-