பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

204



இல் பிறப்பு என்பது ஒன்றும்
        இரும் பொறை என்பது ஒன்றும்
கற்பு எனும் பெயரது ஒன்றும்
        களி நடம் புரியக் கண்டேன்.

வில் ஏந்திய வீரனே! நீர் சூழ்ந்த அந்த இலங்கைத் தீவிலே நல்ல கற்பு ஒழுக்கமாகிய தவம் செய்யும் நங்கையைக் கண்டேன் அல்லன். உயர்குடிக் குணமும், பொறுமை எனும் குணமும், கற்பு எனும் குணமும் ஒருங்கு கூடிக் களிநடம் புரியக் கண்டேன்.

***

வில் பெரும் தடம் தோள் வீர – வில் ஏந்திய நீண்ட பெரும் கையுடைய வீரனே; வெற்பு – திரிகூட மலையின் மீதுள்ள; வீங்கு நீர் இலங்கையில் – மிக்க நீரினால் சூழப்பட்ட இலங்கையில்; நல் பெரும் தவத்தள் ஆய – நல்ல பெரிய கற்பு ஒழுக்கமான தவத்தை செய்கிற; நங்கையை – சீதையை; கண்டேன் அல்லன் – கண்டேன் அல்லேன்; இல்பிறப்பு என்பது ஒன்றும் – உயர்குடிப் பிறத்தலால் மேவும் பெருங் குணமும்; இரும்பொறை என்பது ஒன்றும் – சிறந்த பொறுமை எனும் குணமும்; கற்பு எனும் பெயரது ஒன்றும் – கற்பு எனும் பெயர் கொண்ட ஒன்றும்;(ஒருங்கு கூடி) களிநடம் புரிய – களிப்போடு நடம் புரியக்; கண்டேன் – கண்டேன்.

***

இவ்வாறு சொல்லிவிட்டுப் பிராட்டி அளித்த சூடாமணியை இராமபிரானிடம் கொடுத்தான் அநுமன்.

சூடாமணியைக் கண்ட இராமன் மெய்ம்மறந்து உணர்ச்சி வசப்பட்டான். உரோமங்கள் சிலிர்த்தன. கண்கள் தாரை தாரையாக நீர் சொரிந்தன. மார்பும் தோள்களும் துடித்தன. அழகிய வாய் மடிப்புண்டது. மூச்சு