பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

229

சேர்ந்து தன் செல்வத்தையும் அரசையும் பறிக்கத் திட்டமிட்டதாகச் குற்றஞ் சாட்டுகிறான்.“பகைவருடன் உறவு கொண்டாடும் உள்நோக்கத்துடன்தான், முன்னர் அநுமனை கொல்வதை தடுத்தாய் போலும். இராம இலட்சுமணனை விட நீயே என் பகைவன்!” என கூறும் இராவணனைக் கண்டு வேதனைப்படுகிறான் அறிஞர்க்கறிஞன். உண்மையை இடித்துக்கூறிய தம்பியை ‘போ, போ!’ என விரட்டுகிறான். ஏன்! அவனுடைய கெட்ட காலம் அவனுக்குக் கெடுமதியைத் கொடுக்கிறது.

***

அஞ்சினை ஆதலின்
        அமர்க்கும் ஆள் அலை
தஞ்சு என மனிதர் பால்
        வைத்த சார்பினை;
வஞ்சனை மனத்தினை;
        பிறப்பு மாற்றினை
நஞ்சினை உடன் கொடு
        வாழ்தல் நன்மையோ?

“அட! பயங்கொள்ளி! நீ போருக்குத் தகுதியற்றவன். தஞ்சம் என மனிதர்பால் சார்பு கொண்டுவிட்டவன் நீ. வஞ்சகா! அரக்கர் குலத்தில் பிறந்தும் அவ்வியல்பு சிறிதும் இல்லாது பிறவி மாறியவனே! பாம்புடன் வாழ்வது போல் உன்னுடன் வாழ்வது நலன் தருமோ?”

***

அஞ்சினை - நமது பகைவரைக் கண்டு நீ பயந்து விட்டாய்; ஆதலின் அமர்க்கும் ஆள் அலை - ஆகவே நீ போர் செய்யத் தகுதியற்றவன்: தஞ்சு என - நமக்குத் தஞ்சம் என்று; மனிதர்பால் வைத்த சார்பினை - மனிதர்