பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

234

பறவைக்காக இரு ஆண் பறவைகள் சினத்துடன் போரிட்டன. இராமன் தன் புருவத்தை வளைத்தான்.

இது போதாதென்று வேறொரு புறம், ஒரு ஊடல் காட்சி. இராமன் இதை கண்டான். தனிமை, துன்பத்தை அதிகப்படுத்தியது.

***


உள் நிறை ஊடலில்
        தோற்ற ஓதிமம்
கண்ணுறு கலவியில்
        வெல்லக் கண்டவன்
தண் நிறப் பவள வாய்
        இதழை, தற் பொதி
வெண் நிற முத்தினால்,
       அதுக்கி விம்மினான்.

பெண் அன்னத்தின் உள்ளத்தில் நிறைந்த ஊடல் நிகழ்ந்த காலத்தில் (அதனை எதிர்த்தலாற்றாது பணிந்து) தோல்வியுற்ற ஆண் அன்னம், இரண்டுடம்பும் ஒன்று படுகின்ற கலவிக் காலத்தில் பேரின்பமுற்று வென்றதைப் பார்த்தான் இராமன்; இனிய நிறத்தையுடைய பவழம் போன்ற தன் வாயிதழை, வெண்மையான நிறத்தையுடைய முத்துப் போன்ற பற்களினால் அதுக்கிக்கொண்டு ஏக்கத்தால் விம்மினான்.

***

உள் நிறை ஊடலில் தோற்ற ஓதிமம். உள்ளே நிறைந்த புலவியிலே தோல்வி உற்ற பெடையன்னம்; கண்ணுறு கலவியில் வெல்ல கண்டவன் - கண்ணுக்குப் புலப்படும் புணர்ச்சியிலே வெற்றி பெறக் கண்டவனான இராமன்; தண் நிறம்