பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

235

பவளம் வாய் இதழை -இனிய நிறத்தையுடைய பவளம் ஒத்த வாயிதழை; தன் பொதி வெண் நிற முத்தினால் - தன்னால் மறைக்கப்படுகின்ற முத்துப் போலுள்ள பற்களினால்; அதுக்கி விம்மினான் - கடித்தவண்ணம் பொருமலுற்றான்.

***

இராமன் நிலை கண்ட சுக்ரீவன் முதலியோர் அண்ணலைத் தேற்றி அவன் தன் இருக்கைக்கு அழைத்துச் சென்றனர்.

***

உறைவிடம் எய்தினான்
       ஒருங்கு கேள்வியின்
துறை அறி துணைவரோடு
       இருந்த சூழலில்
முறை படு தானையின்
       மருங்கு முற்றினான்—
அறை கழல் வீடணன்,
       அயிர்ப்பு இல் சிந்தையான்.

இராமன் தன் இருப்பிடத்தை அடைந்தான். சிறந்த அறிவு உடைய அநுமனும், மற்ற அனைவரும் அங்கு இருந்தனர். வானர சேனை, அணிவகுத்ததுபோல் அமர்ந்து இருந்தன. பக்கத்தில் வந்து நின்றான், விபீடணன். அவன் எப்படிப்பட்டவன்? வீரக் கழல் அணிந்தவன். மனத்தில் ஐயமே இல்லாதவன்.

***

உறைவிடம் எய்தினான் - தனது இருக்கையைச் சென்றடைந்த இராமபிரான்; ஒருங்கு - ஒரு சேர; கேள்வியின் துறை அறி துணைவரோடு - கேட்டறிய வேண்டிய