பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

236

நூல்களின் வழிகளை எல்லாம் அறிந்த தன் நண்பருடன்; இருந்த சூழலின் - அமர்ந்திருந்த எல்லையில்; முறைபடு தானையின் மருங்கு - (போர்க்கு) உரிய முறைப்படியே ஒழுகுகின்ற வானரப் படையின் அருகிலே; அறம்கொள் சிந்தையான் - தரும நெறியையே கருதுபவனான, அறைகழல் விபீடணன் - ஒலிக்கின்ற வீர கண்டை புனைந்த வீடணன்; முற்றினான் - சென்றடந்தான்.

***

அரக்கர்களைக் கண்டான் மயிந்தன். அவர்கள் யாரென கேட்டான். அமைச்சன் அனலன், வீடணன் பற்றியும், அவன் அங்கு வந்த காரணம் பற்றியும் கூறும் போது, அரக்கர்கோன் வீடணனை ஏன் விரட்டினான் என்பதைப் பற்றியும் கூறினான். இதை மயிந்தன் இராமனிடம் சொன்னான்.

***

“ஏந்து எழில் இராவணன்,
         இணைய சொன்ன நீ
சாம் தொழிற்கு உரியை,
         என் சார்பு நிற்றியேல்;
ஆம் தினைப் பொழுதினில்
        அகறியால்—எனப்
போந்தனன்” என்றனன்;
        புகுந்தது ஈது என்றான்.

பிறரை வருத்துவதைத் தொழிலாகக் கொண்டுள்ள இராவணன், (விபீடணனை) நோக்கி, "இத்தன்மையான சொற்களைச் சொன்ன நீ என் முன் நிற்பாயானால் இறப்பதற்கே உரியவன் ஆவாய்; (ஆதலால்) தினையளவு பொழுதில் இவ்விடத்தை விடுத்துச் செல்வாயாக!" என்று வெகுண்டு கூறினான், எனவே அவனைத் துறந்து விபீடணன்