பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

237

இங்குச் சரணடைய வந்தான் என்று (அலைன்) கூறினான். நிகழ்ந்தது இதுவே என்று மயிந்தன் இராமனிடம் கூறினான்.

***

‘ஏந்து எழில் இராவணன் - உயர்ந்த அழகினையுடைய இராவணன்: இணைய சொன்ன நீ - இவ்வாறு எனக்கு பிடிக்காத வார்த்தைகளை மொழிந்த நீ; என் கார்பு நிற்றியேல் - என் பக்கம் நிற்பாயானால், சாம் தொழிற்கு உரியை . இறப்பதற்கே தக்கவனாவாய்; (ஆகவே) ஆம் தினை பொழுதினில் அகல்தியாய் என - பொருந்திய தினையளவு நேரத்திற்குள்ளாக என்னைவிட்டு அகல்வாயாக என்று மொழிய, போந்தனன் என்றனன் - (அவ்விடத்தை விடுத்து இங்கு) அந்த வீடணன் வந்தனன் என்று அனலன் தெரிவித்து; புகுந்தது ஈது என்றான் - நிகழ்ந்தது இது’ என்று (தான் கண்டதும் கேட்டதுமான செய்திகளை), மயிந்தன் என்ற வானர வீரன் இராமனிடம் அறிவித்தான்.

***

அப் பொழுது இராமனும்:
        அருகில் நண்பரை
‘இப் பொருள் கேட்ட இவன்
        நீர் இயம்புவீர்-
கைப்புகற்பாலனோ? கழியற்
        பாலனோ-
ஒப்புற நோக்கி, நும்
        உணர்வினால்’ என்றான்.

அப்போது இராமனும் தன் அருகில் இருந்த சுக்ரீவன் முதலிய நண்பரை நோக்கி. (அனலன் கூறியவற்றை) நீங்கள் கேட்பீர்கள். இவ்விபீடணன் நம்மிடத்தில் புகுதற்குத் தகுந்தவனா? அல்லது, புகாது திரும்பிப் போதற்குரியவனா? என்பதை உங்கள் உணர்வினால்