பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

242


தேவர்க்கும் தானவர்க்கும் திசைமுகனே
        முதலாய தேவ தேவர்
மூவர்க்கு முடிப்பரிய காரியத்தை
        முற்றுவிப்பான் முண்டு நின்றாய்
ஆவத்தின் வந்த அபயம் என்றானை
        யயிர்த்தல் விடுதியாயின்
கூவத்தின் சிறுபுனலைக் கடல் அயிர்த்தது
        ஒவ்வாதோ கொற்ற வேந்தே.

‘வெற்றியே பெறும் இயல்புடைய அரசே! தேவர்க்கும், அசுரர்க்கும், நான்முகனாகிய பிரமன் முதலான தலைமைத் தேவர்கள் மூவர்க்கும் முடித்தற்கு அரிய காரியத்தை முடிப்பதற்கு முனைந்திருக்கின்றோம்; (அத்தகைய நாம்) ஆபத்துக் காலத்தில் நம்மை நாடி வந்து அபயம் என்று கூறிய விபீடணனை ஐயுற்று விலக்கி விடுவோம் என்றால், பெரிய நீர் பரப்பையுடைய கடல், கிணற்றிலுள்ள சிறிய அளவான நீர் தன்னை அடித்துக் கொண்டு போய்விடுமோ என ஐயப்படுவதைப் போன்று ஆகாதோ?’

***

கொற்ற வேந்தே - வெற்றி பொருந்திய மன்னவ! தேவர்க்கும் தானவர்க்கும் - தேவகட்கும், அசுரர்கட்கும்; திசை முகனே முதலாய தேவதேவர் மூவர்க்கும் - பிரமதேவன் முதலான தேவாதி தேவர்களான மும்மூர்த்திகட்கும்; முடிப்பரிய காரியத்தை - செய்து முடிக்கவியலாத செயலை; முற்றுவிப்பான் மூண்டு நின்றாய் - முடித்து தரும் பொருட்டு முனைந்துள்ளாய்; ஆவத்தின் - துன்பம் நேர்ந்த காலத்து; வந்து - நம்பால் வந்து; அபயம் என்றானை - அபயம் என்று சொல்லிக் கொண்டு நின்ற இவனை; அயிர்த்து - ஐயம் கொண்டு; அகல விடுதி ஆயின் - நீங்கும்படி விட்டுவிடுவாயாகில்; (அச்செயல்) கடல் - பெரும் நீர்ப்பரப்பான கடலானது; கூவத்தின் சிறு புனலை