பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

243

அயிர்த்தது ஒவ்வாதோ? - கிணற்று நீரை (நம்மை அடுத்து கொண்டு சென்று விடுமோவென) ஐயுற்றதை நிகர்க்காதோ?

(அநுமன் கூறியதைக் கேட்டான் இராமன்) பின்,

***


இன்று வந்தான் என்று உண்டோ?
        எந்தையை யாயை முன்னைக்
கொன்று வந்தான் என்று உண்டோ?
        புகலது கூறுகின்றான்
துன்றி வந்து அன்பு பேணுந்
        துணைவனும் அவனே; பின்னைப்
பொன்றும் என்றாலும், நம்பாற்
        புகழ் அன்றி பிறிது உண்டாமோ?

நம்பால் அடைக்கலம் கோரி வந்தவன் முன்பின் அறியாதவன்; அன்றைக்குத்தான் வந்தவன் என்று விலக்குவது சரியோ? காலம் இதற்குத் தடையாகாது. தந்தையையும், தாயையும், அண்ணனையும் கொன்று வந்தவன் அடைக்கலமாக வந்தாலும் ஏற்றுக் கொள்வதே முறையான செயல் எனின் அத்தகு கொடுமை ஏதும் செய்தறியாத விபீடணனை ஏற்றுக் கொள்வதே முறை. பல நாளாக பழகி வந்து அன்பு செய்கின்ற நண்பனுமாவான் அவன். பின்னர் அவன் அந்நட்பு முறையினின்றும் மாறுபட்டு நமக்குத் தீமை விளைவித்தாலும் அதனால் நமக்குப் புகழுண்டாகுமே அன்றி பழி உண்டாகாது.

***

‘புகலது கூறுகிறான்’ - ‘நான் உங்கள் அடைக்கலம்’ என்று சொல்பவன்; இன்று வந்தான் என்று உண்டோ - இன்றைக்குத்தான் வந்தவன் என்று விலக்கி விடுவதற்கு