பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

250

இராமனடியில் வீழுந்தான்; “அபயம், அபயம்!” என வேண்டினான்.

***


‘ஆழி நீ; அனலும் நீயே;
        அல்லவை எல்லாம் நீயே;
ஊழி நீ; உலகும் நீயே; அவற்று
        உறை உயிரும் நீயே;
வாழியாய்! அடியேன் நின்னை
        மறப்பேனோ? வயங்கு செந்தீச்
குழுற உலைந்து போனேன்;
        காத்தருள்—சுருதி மூர்த்தி!’

கடலுக்குத் தலைவனான வருணன் செருக்குக் குலைந்தான். இராமனை நோக்கி, “வேதங்களின் வடிவானவனே! இந்தக் கடலும் நீயே. இந்தக் கடலை எரிக்கின்ற தீயும் நீயே; இவையல்லாத எல்லாப் பொருள்களும் நீயே; உலகத்தை அழிக்கின்ற ஊழியும் நீயே; உலகும் நீயே; உலகின் உயிர்களும் நீயே. அத்தகைய பேராற்றல் உடைய இறைவனாகிய உன்னை, உன் அடியவனாகிய நான் மறப்பேனா? செந்தீ என்னைச் சூழ்ந்து கொண்டமையால் அழித்து போனேன். என்னை அழிவினின்று காப்பாயாக!” என்று மிகவும் தாழ்மையுடன் வேண்டினான்!

***

(வருணன் இராமபிரானை நோக்கி), “சுருதி மூர்த்தி - வேதங்களால் மேலான பொருளாகப் புகழப்படுகின்ற சுவாமி! ஆழி நீ, அனலும் நீயே - கடலும் நீ, தீயும் நீயே; ஊழி நீ - உலகினை அழிக்கும் ஊழிக்காலமும் உன்னிடம் நின்று வெளிப்படுவதே; உலகும் நீயே - உலக வடிவானவனும் நீயே; அவற்று உறை உயிரும் நீயே - அவ்வுலகங்களி-