பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

253

உப்பு நீர் அகத்துத் தோய்ந்த
        ஒளி நிறம் விளங்க அப்பால்
அப்பு நீர் ஆடுவான் போல்
        அருக்கனும் அந்தம் சேர்ந்தான்.

பரவிய தன்மையினையுடைய வானர வீரர், அணை கட்டுவதற்காக பெரிய மலைகளைக் கடலிலே விசினர். இதனால் பவளமென சிவந்திருந்த சூரிய கிரணங்கள் கடுமையாகத் தோன்றும்படி, கடலின் உப்பு நீர் தோய்ந்து, அவன் உடல் ஒளி விளங்கியது. அப்பாலுள்ள தண்ணிரிலே முழுகுபவனைப் போலச் சூரியனும் அத்தகிரியை அடைந்தான்.

***

பப்பு நீர் ஆய வீரர் - பரவும் தன்மை வாய்ந்த வானர வீரர்; பரு வரை கடலில் பாய்ச்ச - பெரிய மலைகளைக் கடலிடை இட்டதனாலே; துப்பு நீர் ஆய தூய சுடர்களும் - பவழம் போன்று செந்நிறம் பெற்ற தூய்மையான தன் கிரணங்களும்; கறுக்க வந்திட்டு - கறுத்திடுமாறு (அக்கடலினின்று தெறித்து வந்து; உப்பு நீர் அகத்துள் தோய்ந்த - உப்பு நீர் தன்னிடம் படிந்ததனால் (மங்குதல் அடைந்த); ஒளி நிறம் - ஒளியுடன் கூடிய நிறம்; விளங்க - விளங்கும்படி; அப்பால் - அதன் பிறகு; அப்பு நீர் ஆடுவான்போல் அருக்கனும் அந்தம் சேர்ந்தான் - அப்பு என்று சொல்லப்படும் தூய நீரில் மூழ்குபவன் போன்று அத்தமன கிரியை அடைந்தான்.

***

சேதுவைக் கட்டிமுடித்தான் நளன், வானரர் உதவியுடன். நளனின் சேவையைப் போற்றி இராமன் தனக்கு வருணன் அளித்த காணிக்கையைப் பரிசாக அளித்தான். உடன் சேதுவை சேனையுடனே கடந்தனர். சுவேல மலையில் இறங்கி, நளனையும் நீலனையும் தமக்குப் பாசறைகளை அமைக்குமாறு கூறினான். இராவணனின் ஒற்றர் இருவர் வானர உருக்கொண்டு வானர சேனையை வேவு